News March 19, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

➤ பாஜக – பாமக கூட்டணி உறுதியான நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் ராமதாஸ் அறிவிப்பை வெளியிடுகிறார் ➤ மக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார் ➤ அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் ➤ மஞ்சும்மெல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்தது மனதுக்கு வருத்தமாக இருப்பதாக இயக்குநர் பாக்யராஜ் கருத்து
Similar News
News October 21, 2025
தீபாவளியில் வண்ணமயமான இந்திய நகரங்கள்!

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நாடு நேற்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. வாணவேடிக்கைகளும், பட்டாசு சத்தங்களும் நேற்றைய இரவை மறக்க முடியாத நாளாக மாற்றியது. ஒட்டுமொத்த இந்தியாவும் தீபாவளியை எப்படி கொண்டாடியது என்ற போட்டோஸை மேலே கொடுத்துள்ளோம். அவற்றை வலது புறமாக Swipe செய்து பார்க்கவும். இந்த அழகிய பதிவை நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News October 21, 2025
காவலர் நினைவுச் சின்னத்தில் CM ஸ்டாலின் மரியாதை

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னை டிஜிபி வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து CM ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வீர மரணமடைந்த காவலர்களுக்கு ராயல் சல்யூட் அடித்த CM, இதனையடுத்து மரக்கன்றையும் நட்டார். அதன் பின்னர், காவல்துறையில் கருணை அடிப்படையில் நியமனம் பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். #PoliceCommemorationDay
News October 21, 2025
அதிமுகவுடன் கூட்டணி.. விஜய் போட்ட கண்டிஷன் இதுதான்

NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க அதிமுக மட்டுமின்றி, டெல்லி மேலிடமும் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியிலிருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் தவெகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் CM நாற்காலி தங்களுக்கே வேண்டும் என கூறியதாக தெரிகிறது. பின்னர், துணை முதல்வர், மத்திய வாரிய பதவிகள் உள்ளிட்டவைகளை வழங்க முன்வந்ததாம். ஆனாலும், அதை விஜய் தரப்பு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.