News October 27, 2024
அரசுப்பணி போட்டித் தேர்வு எழுதுவோருக்கு…

அரசு பணி போட்டித் தேர்வு எழுதுவோருக்கு கல்வி டிவியில் நாளை முதல் நவ.1 வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்தும் தேர்வில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை 7- 9 மணிவரை நேரலையும், மறு ஒளிபரப்பு இரவு 7- 9 மணி வரையும் காணலாம். SHARE IT.
Similar News
News January 18, 2026
ரோஹித்தின் 5% ரெக்கார்டு கூட இல்லை..

NZ-க்கு எதிரான முதல் 2 ODI-ல் ரோஹித் சொதப்ப, அவர் சரியாக பயிற்சி எடுக்கவில்லை என இந்திய துணை பயிற்சியாளர் ரயான் டென் டோசேட் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ரோஹித்தின் கரியர் ரெக்கார்டுகளில் 5%-ஐ கூட ரயான் செய்ததில்லை என இந்திய Ex கிரிக்கெட்டர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். பொதுவெளியில் அணி வீரர் குறித்து இப்படி கருத்து தெரிவிப்பது வீரரை மனதளவில் தளர்வடைய செய்யும் எனவும் அவர் சாடினார்.
News January 18, 2026
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

ஸ்டாலின் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட MGR மன்ற இணை செயலாளர்கள் பிச்சை, M.முத்துராமன், நகர அம்மா பேரவை தலைவர் கண்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதன் பின்னணியில், திமுகவில் ஐக்கியமான அதிமுக Ex அமைச்சர் அன்வர் ராஜா செயல்பட்டுள்ளார்.
News January 18, 2026
அரசு கஜானாவில் போதை பொங்கல்: அருண்ராஜ்

தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, அரசின் கஜானாவில் மது விற்பனை பணம் மட்டும் பொங்கி வழிந்துள்ளதாக அருண்ராஜ் விமர்சித்துள்ளார். 4 நாள்களில் ₹900 கோடி வரை மது விற்பனை நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், ‘மனமகிழ் மன்றங்கள்’ வழியாக கள்ள மது விற்பனை ஆறாக ஓடியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொல்லைப்புறமாக மது விற்பனையை பெருக்குவதுதான் திடாவிட மாடல் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


