News October 27, 2024

தவெக மாநாட்டுக்கு பைக்கில் சென்ற இளைஞர் பலி

image

சென்னையில் இருந்து TVK மாநாட்டிற்கு பைக்கில் சென்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை DMS மெட்ரோ ரயில் நிலையம் அருகே பைக் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாநாட்டிற்கு பைக்கில் வர வேண்டாம் என விஜய் மீண்டும் மீண்டும் அறிவுறுத்திய நிலையிலும், இத்துயரம் நிகழ்ந்துள்ளது.

Similar News

News February 18, 2026

ஒவ்வொரு குடிமகன் மீதும் ₹1.27 லட்சம் கடன்: அன்புமணி

image

70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ₹4.96 லட்சம் கோடி கடனை திமுக அரசு வாங்கியுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். ஒவ்வொரு குடிமகன் மீதும் ₹1.27 லட்சம் கடன் சுமை உள்ளதாகவும், பழைய கடனை அடைக்க புதிய கடன் ₹55,844 கோடியை தமிழக அரசு வாங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூலதன செலவுகளை விட 3.5 மடங்கு அதிகமான கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

News February 18, 2026

இந்த சட்டையின் விலை ரூ.1 லட்சமா!

image

ஃபேஷன் உலகில் எப்போதும் புதுமைகளுக்கு பஞ்சமில்லை. விநோதமான ஸ்டைல்கள் கூட சில நேரங்களில் ஃபேஷனாக மாறும். அந்த வகையில், பிரபல சர்வதேச பிராண்டான VETEMENTS-ன் ஒரு சட்டை பிரபலமடைந்துள்ளது. அயன் செய்யும்போது சூடு அதிகரித்தால் ஏற்படும் பழுப்பு நிற கரை தற்போது புது டிசைனாக மாறியுள்ளது. இந்த சட்டையின் விலை தோராயமாக ₹1 லட்சம். இந்த ஃபேஷன் குறித்து உங்கள் கருத்து என்ன?

News February 18, 2026

சவுரவ் கங்குலி பொன்மொழிகள்

image

*தோல்விகள் உங்களை வீழ்த்த அனுமதிக்காதீர்கள். அவை அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். *களத்தில் நீங்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகளே உங்களை ஒரு சிறந்த தலைவனாக மாற்றும். * உங்களால் முடியும் என்று நீங்கள் நம்பினால், பாதி கிணற்றைத் தாண்டியதற்குச் சமம்.*திறமை உங்களுக்கு வாய்ப்புகளைத் தரும், ஆனால் கடின உழைப்பும் ஒழுக்கமும் மட்டுமே உங்களை உச்சத்தில் வைத்திருக்கும்.

error: Content is protected !!