News October 27, 2024

தீபாவளி: சென்னை, நெல்லை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

தீபாவளியை முன்னிட்டு ரயில்கள், அரசு பஸ்களில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் (வண்டி எண். 06047) இன்று (அக்.27) மாலை 4 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு, நாளை காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். அதேபோல, நாளை (அக்.28) சென்ட்ரலில் மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண். 06073) மறுநாள் காலை 7:15-க்கு நெல்லையை சென்றடையும்.

Similar News

News February 22, 2026

நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது

image

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை நாளை காலை 10 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடவுள்ளார். சமீபத்தில் நடந்த SIR பணிகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.44 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றனர். 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நாளை வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலை இங்கே <>கிளிக்<<>> செய்து பார்க்கலாம். SHARE.

News February 22, 2026

தங்கம் விலை சவரனுக்கு ரூ.17,000 சரிவு.. REASON

image

கடந்த மாத இறுதியில்(ஜன.29) ஒரு சவரன் ₹1,34,400-க்கு விற்பனையான தங்கம் இன்று(பிப்.22) ₹1,17,400-க்கு விற்பனையாகிறது. *அமெரிக்க டாலர் மதிப்பு வலிமை அடைந்தது. *சீனா தனது கையில் உள்ள தங்கத்தை அதிகளவில் விற்க தொடங்கியதே இந்த சரிவுக்கு காரணம் என தங்க வணிக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், சில மாதங்களுக்கு இதே நிலை நீடிக்கும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர். எனவே தங்கம் வாங்க நினைப்போர் கவனமாக இருங்கள்.

News February 22, 2026

கையாலாகாத ஆட்சியைத் தொடர விட்டால்..: EPS

image

தீவிரவாத தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு TN சட்டம் ஒழுங்கை திமுக சீர்குலைத்துள்ளதாக EPS விமர்சித்துள்ளார். டெல்லியில் குண்டு வைக்க திட்டமிட்டதாக <<19207535>>8 பேர் கைதானதை<<>> குறிப்பிட்ட அவர், டெல்லி போலீஸ் வந்து கைது செய்யும்வரை TN அரசின் Anti Terrorism Squad என்ன செய்துகொண்டு இருந்தது என கேட்டுள்ளார். மேலும், இந்த கையாலாகாத ஆட்சியை தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு சம்பவம் நடக்குமோ என மக்கள் அஞ்சுவதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!