News October 27, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி…

➤சூடானின் அல்-கம்லின் பிராந்தியத்தில் துணை ராணுவப்படை கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். ➤ஜப்பானில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற அமெரிக்க ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ➤ஈராக்கின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த நிசார் அமேதி பதவியை ராஜினாமா செய்தார். ➤உக்ரைனின் டினிப்ரோ நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பல கட்டடங்கள் தரைமட்டமாகின.
Similar News
News January 24, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 590 ▶குறள்: சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. ▶பொருள்: ஓர் ஒற்றரின் திறனை வியந்து, பிறர் அறிய அவருக்கு சிறப்பு செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
News January 24, 2026
EB கட்டணம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்

இந்த செயல்பாடுகள் 10% வரை மின்சார இழப்பை ஏற்படுத்தும்: *TV-யை ஆஃப் செய்து, Set-top box-ஐ அப்படியே விடுதல் *ரிமோட்டில் மட்டும் off செய்துவிட்டு, ஸ்விட்சை off செய்யாதது *AC remote-ஐ மட்டும் off செய்துவிட்டு, Stabilizer-ஐ அப்படியே விடுதல் *பயன்பாடு இல்லாமல் ஸ்விட்ச் போட்ட நிலையில், போன் சார்ஜர் இருத்தல். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு र1000 வரை கூடுதலாக செலவாகிறது.
News January 24, 2026
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நடிகர் கைது

மும்பையின் ஓஷிவாராவில் உள்ள குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு முன் குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வந்த போலீசார், இதில் கமால் கானுக்கு தொடர்பு இருப்பதாக அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் அவரை கைது செய்தனர்.


