News October 27, 2024

தாசில்தார்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளராக பணியாற்றியவர் சந்திரசேகரன். இவரை தேனி மாவட்ட சிப்காட் நில எடுப்பு தாசில்தாராகவும், சிப்காட் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றிய சரவணபாபு என்பவரை ஆட்சியர் அலுவலக மேலாளராகவும் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News January 25, 2026

தேனி: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE

News January 25, 2026

தேனி: இளைஞர்கள் மீது தாக்குதல்

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (26). இவரது நண்பரான விருமாண்டி (28) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன் தினம் அபினேஷ் உள்ளிட்ட நான்கு பேர் நவீன்குமார் மற்றும் விருமாண்டியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் கூடலூர் தெற்கு போலீசார் அபினேஷை நேற்று கைது செய்தனர்.

News January 25, 2026

தேனி: போடி அருகே ஒருவர் மீது தாக்குதல்

image

போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கும் நிலம் வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்த முன் விரோதத்தின் காரணமாக ஆசைத்தம்பி தூண்டுதலின் பேரில் கருத்தப்பாண்டி உள்ளிட்ட ஆறு பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் கருத்தபாண்டியை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!