News October 27, 2024
6581 பயனாளிகளுக்கு தீபாவளி இலவச வேட்டி சேலை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தாலுகாவில் 1109 ஆற்காட்டில் 1107, கலவையில் 593 நெமிலியில் 1093, சோளிங்கரில் 919, வாலாஜாவில் 1,760 என மொத்தம் 6581 சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் இன்று உத்தரவிட்டுள்ளார்
Similar News
News November 12, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பூர்த்தி செய்யப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பெறப்படும் போது கைபேசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று (நவ.11) நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
News November 11, 2025
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று (நவ.11) மாவட்டங்களில் அனைத்து துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்துகொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News November 11, 2025
ராணிப்பேட்டை: இளைஞர்களே செம வாய்ப்பு!

மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <


