News October 27, 2024
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ரேஷன் கடைகள் திறப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 25, 2025
திருப்பூரில் நூற்றாண்டு கண்ட மூதாட்டி!

திருப்பூர்: கே.செட்டிப்பாளையத்தில் அன்னபூரணி என்ற மூதாட்டியின் நூறாவது பிறந்தநாள் விழா குடும்ப சங்கமமாக நடைபெற்றது. 6 மகன்கள், 7 மகள்கள், 97 பேரன், பேத்திகள் பங்கேற்று, ஒரே மாதிரி உடை அணிந்து, அன்னபூரணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
News August 25, 2025
திருப்பூரில் நீங்களும் மேனேஜர் ஆகலாம்!

திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’மருத்துவ நிர்வாக அதிகாரி’ பணிக்கான பயிற்சி திருப்பூரிலேயே வழங்கப்படுகிறது. கடந்த ஆக.1 ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. மொத்தம் 49 காலிப்பணியிடங்கள் உள்ளன. பயிற்சி பெற்றால் உங்களுக்கு வேலை நிச்சயம். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<
News August 25, 2025
திருப்பூர்: விளையாட்டால் நடந்த விபரீதம்!

திருப்பூர்: தாராபுரத்தில் காதணி விழாவிற்கு சென்ற காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வந்த்(19) நேற்று(ஆக.24) அமராவதி ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அஸ்வந்த், மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் யாரும் குளிக்க கூடாது, என போடப்பட்ட எச்சரிக்கையை மீறி விளையாட்டாக குளித்ததால் இந்த விபரீதம் நடந்தேறியுள்ளது எனத் தெரிவித்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.