News October 27, 2024
ஜெயிலர் படத்திற்கு வசனம் எழுதினேனா? KSR மறுப்பு

ஜெயிலர் படத்துக்கு இயக்குநர் KS ரவிக்குமார் வசனம் எழுதியதாக தகவல் பரவி வருகிறது. இதை KS ரவிக்குமார் மறுத்துள்ளார். ரஜினி தன்னிடம் படத்தின் கதையை சொன்னதாகவும், அப்போது 2 மாற்றங்களை செய்யும்படியே கூறியதாகவும், இதுதவிர வேறு எதையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். செய்யாததை செய்ததாக கூறாமல், KSR இப்படி வெளிப்படையாக சொன்னதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
தஞ்சாவூர்: நினைத்த காரியம் கைகூட இந்த கோயில் போங்க!

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் கபர்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள வெள்ளை விநாயகரை, தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர்.என்பது ஐதீகம். எனவே பக்தர்கள் இந்த விநாயகரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பதும், எடுத்த காரியம் நிச்சயமாக வெற்றயடையும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!
News January 17, 2026
19 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற வீரர்

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதில் 19 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்து, ₹8 லட்சம் மதிப்பிலான காரை தட்டிச் சென்றார். பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் 17 காளைகளை அடக்கி, 2-வது இடத்தை பிடித்து பைக் பரிசு பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஏவிஎம் பாபுவின் காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
News January 17, 2026
SPONSOR-களைத் தேடுவது ஏன்? அஜித்தின் விளக்கம்

நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்குப் பின் விளம்பரம் ஒன்றில் நடித்தது பேசுபொருளானது. இதனிடையே SPONSOR-களை தேடுவது குறித்த அவரது பேட்டி வைரலாகியுள்ளது. அதில் சொத்து சேர்க்க SPONSORகளை தேடவில்லை என்றும், ரேஸ் டிரைவர்கள், கார் உற்பத்தி நிறுவனங்கள் எனப் பலரின் நன்மைகளை கருத்தில்கொண்டு SPONSOR-க்காக பல கதவுகளை தட்டி வருவதாக விளக்கமளித்துள்ளார்.


