News March 19, 2024

மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் இருக்கிறது

image

உக்ரைனில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், தங்களை எதிர்த்துப் போரிட்டால் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் அபாயம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 5ஆவது முறை அதிபராகவுள்ள புதின் மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘உலகப் போர் சூழலை யாரும் விரும்பவில்லையென நினைக்கிறேன். ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி இறந்தது மிகவும் சோகமான நிகழ்வாகும்’ என்றார்.

Similar News

News April 4, 2025

ஆண்டாள், ரங்கமன்னார் நாச்சியார்பட்டிக்கு புறப்பாடு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நேற்று (ஏப்.3) கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளல் நடைபெறும். இரண்டாம் நாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நாச்சியார்பட்டிக்கு புறப்பட்டனர். ஏப்ரல் 11 ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

News April 4, 2025

ஹாஸ்பிடலின் பணத்தாசை.. பறிபோன கர்ப்பிணியின் உயிர்

image

பணத்துக்கு கொடுக்கும் மதிப்பு உயிருக்கு இல்லாததால் புனேவில் பரிதாபமாக கர்ப்பிணியின் உயிர் பறிபோனது. புனேவில் வலியில் துடித்த கர்ப்பிணிக்கு பணம் கட்டினால்தான் அட்மிஷன் என ஹாஸ்பிடலில் கண்டிஷன் போட்டுள்ளனர். இதனால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அப்பெண் உயிரிழந்துள்ளார். வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் உலகத்தை பார்க்காமலேயே மாண்டனர்.

News April 4, 2025

இந்திய பங்குச் சந்தையில் ₹8.5 லட்சம் கோடி இழப்பு

image

அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்பால் அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதனால், சென்செக்ஸ் 914 புள்ளிகள் சரிந்து 75,381 புள்ளிகளிலும், நிப்ஃடி 343 புள்ளிகள் குறைந்து 22,906 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. பங்குகள் விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ₹8.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!