News October 27, 2024
நியூசி. அணிக்கு சச்சின் வாழ்த்து.. ஏன் தெரியுமா?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பதற்கு நியூசி. அணிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், இந்தியா வரும் ஒவ்வொரு அணிக்கும் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும் என்றும், ஆனால் நியூசி. அணி சிறப்பாக விளையாடி அதை சாத்தியம் ஆக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். 13 விக்கெட்டுகளை சாய்த்த நியூசி. வீரர் சான்ட்னருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம்!

கடலூர் செம்மங்குப்பத்தில் நேர்ந்த விபத்துக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 7.10 மணிக்கு ரயில் வருவது குறித்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்டை மூடாமல் மீண்டும் தூங்கியுள்ளார். கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். So Sad!
News July 9, 2025
4 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர்

3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் இணைந்துள்ளார். 3-வது டெஸ்டுக்கான அணியில் ஒரு மாற்றத்தை இங்கிலாந்து அணி செய்துள்ளது. அதன்படி 4 ஆண்டுகள் கழித்து டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட உள்ளார். முழு உடல் தகுதியை எட்டாததால் முதல் 2 டெஸ்டில் ஆர்சர் விளையாடவில்லை. ஜோஷ் டங்கிற்கு பதில் அவர் அணியில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து பந்து வீச்சு மேலும் வலுவடைந்துள்ளது.
News July 9, 2025
செயல்படாத ஜன் தன் கணக்குகள் முடக்கம்?

வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் ஜன் தன் சேமிப்பு கணக்கை மத்திய அரசு அளிக்கிறது. இக்கணக்கில் குறைந்தபட்ச பணம் எதுவும் இருப்பு வைக்க வேண்டியதில்லை என்பதால் நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், பல ஜன் தன் வங்கி சேமிப்பு கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும், அதை முடக்க அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.