News March 19, 2024
வரலாற்றில் இன்று!

➤ 1895 – லூமியர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர். ➤1944 – நாஜி ஜெர்மானியப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின. ➤ 1945 – ஜப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர். ➤ 2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.
Similar News
News August 13, 2025
‘குடும்பமே என்னை கொன்று விடும்’.. பெண்ணுக்கு சோகம்

‘என்னை அழைத்துச் செல். வீட்டில் சொல்பவரை நான் திருமணம் செய்ய மறுத்துவிட்டால், என் குடும்பத்தினர் என்னை கொன்று விடுவார்கள்.’ குஜராத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பெண், தனது காதலனுக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ் இது. காதலன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவான பெண்ணின் தந்தையை போலீஸ் தேடி வருகிறது. ஜூனில் நடந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
News August 13, 2025
2,500 தெருநாய்களைக் கொன்று உரமாக்கினோம்: கர்நாடக MLC

தான் சிக்கமகளூர் சேர்மனாக இருந்தபோது 2,500 தெருநாய்களைக் கொன்று, அதனை மரங்களுக்கு அடியில் புதைத்து இயற்கை உரமாக்கியதாக கர்நாடக MLC போஜேகவுடா சட்டசபையில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், யாராவது தெருநாய்கள் அகற்றப்படுவதை எதிர்த்தால் அவர்களது வீடுகளுக்குள் 10 தெருநாய்களை விட்டு விடுவேன் என்றும் அவர் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
News August 13, 2025
நீங்க தான் தலைவரே முதல் வாத்தியார்.. ஹிருத்திக் ரோஷன்

‘என் முதல் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்’ என ரஜினிகாந்தைக் குறிப்பிட்டு, அவரது 50 ஆண்டுகால திரைப் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஹிருத்திக் ரோஷன். ‘கூலி’ படத்துடன் ஹிருத்திக், ஜூனியர் NTR நடித்துள்ள ‘WAR 2′ படமும் ரிலீஸாகிறது. இந்நிலையில், ஒரு நடிகராக எனது முதல் படியை உங்கள் (ரஜினி) அருகில் இருந்து தொடங்கியதாகக் கூறி அவர் நெகிழ்ந்துள்ளார். நீங்க படம் பார்க்க ரெடியா?