News March 19, 2024
புறநானூறு படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி கைக்கோர்த்த படம் ‘புறநானூறு’. 2023 நவம்பரிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமென கூறப்பட்ட நிலையில், இன்னமும் தொடங்கவில்லை. இது குறித்து நடிகர் சூர்யா தனது X பக்கத்தில், ‘புறநானூறு படத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. உங்களுக்கு சிறப்பான ஒன்றை தர வேலை செய்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பில் சந்திப்போம்’ என்றார்.
Similar News
News October 31, 2025
இதுதான் இந்த ஆண்டின் வார்த்தை!

ஒரு ஆண்டில் மக்கள் அதிகமாக பயன்படுத்திய சொல்லை, Word of the year என குறிப்பிட்டு பல பிரபல Dictionary-களும் ஒரு லிஸ்ட்டை வெளியிடுவார்கள். அப்படி, 2025-ம் ஆண்டின் ‘Word of the year’ ஆக ‘67’-ஐ Dictionary.com தேர்வு செய்துள்ளது. US ராப்பர் Skrilla-வின் பாடலான Doot Doot (6 7) என்பதை மக்கள் அதிகமாக பயன்படுத்தியதால், இந்த நம்பர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன. நீங்க இந்த வருடம் அதிகமா யூஸ் பண்ண வார்த்தை எது?
News October 31, 2025
ஹிந்து மதம்: JD வான்ஸ் சர்ச்சை கருத்து!

USA-வின் குடியேற்ற சட்டங்கள் குறித்து இந்திய வம்சாவளி பெண்ணுடன் நடந்த <<18155827>>விவாதத்தின்<<>> போது, JD வான்ஸ் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வான்ஸின் மனைவி ஹிந்து என்பதை சுட்டிக்காட்டிய பெண், குழந்தைகளுக்கு எந்த மதம் குறித்து சொல்லி தருகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு வான்ஸ், தனது மனைவி உஷா, ஹிந்து மதத்தில் இருந்து மாறி, கிறிஸ்தவராக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. இங்கு NO விடுமுறை

மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-ம் ஆண்டு சதய விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், அக்.22-ம் தேதி கனமழையால் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


