News October 26, 2024
சட்டம் அறிவோம்: BNS பிரிவு 110 என்ன சொல்கிறது?

ஒருவருக்கு மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் (அ) தன் செயலால் அத்தகைய மரணம் ஏற்படுமென தெரிந்தே தெளிவுடன் தாக்குவது, அடிப்பது, துன்புறுத்துவது, சித்ரவதை செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது கொலை முயற்சி என வரையறுக்கப்படுகிறது. இது BNS பிரிவு 110-இன் படி குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் முதல் 7ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறை & அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
Similar News
News April 29, 2025
கணவனுக்கு நேர்ந்த சோகம்.. பேரனுடன் ஓடிப்போன மனைவி!

உ.பி.யில் இந்திராவதி (50) என்ற பெண்மணி, தனது கணவன், 4 குழந்தைகளை கைவிட்டு பேரன் ஆசாத்துடன் (30) ஓடிப்போய் திருமணம் செய்த ஷாக் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் புகார் அளித்த நிலையில், இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் இணையை தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இருப்பதாக கூறி, போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதற்காக இப்படியுமா.
News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
News April 29, 2025
2,180 குடும்பங்கள் மொத்தமாக அழிப்பு

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 52,243 பாலஸ்தீனியர்களில் 65% பேர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 18,000 குழந்தைகள், 12,400 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,180 குடும்பங்களை மொத்தமாக அழித்ததாகவும் கூறியுள்ளது. மேலும், 1,400 டாக்டர்கள், 212 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை பேர் உயிரிழந்தும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை.