News March 19, 2024
சூர்யகுமார் விளையாடுவதில் சந்தேகம்

நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்கம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், அதைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு சென்றார். அப்போது நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் முழுமையாக அவர் தயாராக 3 வாரங்கள் வரை தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News October 27, 2025
BREAKING: ₹20 லட்சத்தை விஜய்க்கே திருப்பி அனுப்பினார்

கரூர் துயரத்தில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி, விஜய் அனுப்பிய ₹20 லட்சத்தை அவருக்கே திருப்பி அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவரை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் கூறிய நிலையில், சங்கவியை அழைத்துச் செல்லவில்லை எனத் தெரிகிறது. எனவே, தனக்கு பணம் வேண்டாம், விஜய் ஆறுதல் தெரிவித்தால் போதும் என அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
News October 27, 2025
2025-ல் சதம் விளாசிய இந்திய வீரர்கள்

2025-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர். அவர்கள் யார்? எத்தனை சதம் அடித்தனர்? என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை ஆச்சரியப்பட வைத்த வீரர் யார்? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 27, 2025
9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ₹1,000.. நாளை விண்ணப்பம்

அனைத்து கிராமப்புற பள்ளிகளுக்கும் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நவ.9-ல் நடைபெறவுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை நாளை முதல் டவுன்லோடு செய்யலாம். இதில், மாவட்டத்திற்கு 100 பேர் (50 மாணவர்கள், 50 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு ஆண்டிற்கு ₹1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க நவ.4 கடைசி தேதி. SHARE IT.


