News October 26, 2024

தவெக சார்பில் பஞ்சர் கடை!

image

தவெக சார்பில் விக்கிரவாண்டியில் பஞ்சர் கடை திறக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கட்சித் தொண்டர்கள் வரவுள்ள நிலையில், அவர்களின் வாகனம் பழுதானால் சரிசெய்ய கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பஞ்சர் கடை திறக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 19, 2026

விஜய்யிடம் துருவித் துருவி கேள்விகளை கேட்ட CBI

image

விஜய்யிடம் 2-வது முறையாக CBI நடத்தும் விசாரணையில் பல கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. *கூட்டநெரிசல் தொடர்பான தகவல் எப்போது கிடைத்தது? *பிரசார வாகனத்தில் இருந்து கூட்ட நெரிசலை பார்க்க முடியவில்லையா? * கரூர் – திருச்சி வரையிலான பயணத்தில், நெரிசல் சம்பவம் தொடர்பாக யார் யாரிடம் பேசி, எந்த தகவலை பெற்றீர்கள்? *போலீஸ் அதிகாரிகளின் எச்சரிக்கை மீறப்பட்டதா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

News January 19, 2026

தமிழகத்திற்கு Goodbye சொன்ன வடகிழக்கு பருவமழை

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக IMD அறிவித்துள்ளது. இதன் காரணமாக 22-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அதேசமயம் வரும் 23-ல் இருந்து 25-ம் தேதி வரை TN மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது. மேலும் 20-ம் தேதி வரை நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் IMD கூறியுள்ளது.

News January 19, 2026

மாமல்லன் நீர்த்தேக்கத்தால் 170 மில்லியன் லிட்டர் நீர்: CM

image

திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த உண்மை தெரிந்தும் திமுக குறித்து பலர் பொய் சொல்வதாக CM ஸ்டாலின் பேசியுள்ளார். திருப்போரூரில் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர், சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது என்றும், இதனால் நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் நீரை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!