News March 19, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Similar News
News October 21, 2025
முகமது அலியின் பொன்மொழிகள்

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். * என்னைத் தொடர்ந்து இயங்க வைப்பது என் குறிக்கோள்களே.
News October 21, 2025
WORLD ROUNDUP: மெக்சிகோ வெள்ளத்தில் 76 பேர் பலி

*பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற பதிவான லேசான நில அதிர்வு
*ஏமன் கடற்கரையில் எல்பிஜி டேங்கர் வெடித்த நிலையில் 23 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
*ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்வரை போர் ஓயாது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
*மெக்சிகோவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 76-ஆக உயர்வு
*டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் போராட்டம்
News October 21, 2025
டிரம்பின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த ஈரான்

ஈரான் – அமெரிக்கா இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை 5 சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப் மீண்டும் ஈரானை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை ஈரானின் தலைவர் காமேனி நிராகரித்துள்ளார்.