News October 26, 2024
கொள்ளிடம்: தண்ணீரில் மூழ்கி கூலித் தொழிலாளி பலி

கொள்ளிடம் அருகே சின்ன ஓதவந்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜான்(65). கூலித் தொழிலாளியான இவர் இன்று புதுமணியாற்றில் உள்ள கதவணையில் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக ஜான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
மயிலாடுதுறை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

மயிலாடுதுறை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘இங்கே <
News January 26, 2026
மயிலாடுதுறை: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம் சாய் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 77வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 310 பயனாளிகளுக்கு ₹95 லட்சத்து 12 ஆயிரத்து 629 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
News January 26, 2026
மயிலாடுதுறை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.


