News March 19, 2024
ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதா?

வீட்டிலிருந்து (Work From Home) வேலை செய்யும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது என டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. கணினி, மடிக்கணினி & மின்னணு உதிரி சாதனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான டெல், தனது ஊழியர்களை ஹைப்ரிட் – ரிமோட் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. இதில் ஹைப்ரிட் ஊழியர்களை வாரத்தில் 3 நாள்களுக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 19, 2025
Sports Roundup: பேட்மிண்டனில் இந்திய இணை அசத்தல்

*Women’s WC-ல் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து. *Women’s WC அரையிறுதிக்கு 2-வது அணியாக தென்னாப்பிரிக்கா தகுதி. *வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ODI-ல் வங்கதேசம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. *பேட்மிண்டன் தரவரிசையில் சாத்விக், சிராக் இணை 3-வது இடத்திற்கு முன்னேற்றம். * புரோ கபடியில் தெலுகு டைட்டன்ஸ் 40-31 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பல்தான்ஸை வீழ்த்தியது.
News October 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 19, 2025
அப்பாவு பேரவை மரபுகளை மீறுகிறார்: அன்புமணி

புதிய சட்டமன்ற குழு நிர்வாகிகளை ஏற்க சபாநாயகர் அப்பாவு மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். 24 உறுப்பினர்களை (மொத்த உறுப்பினர்களில் 10%) கொண்ட கட்சிகளை மட்டுமே பேரவையில் அங்கீகரிக்க முடியும் என்று, அரசியலுக்கு ஏற்ப விதிகளை மாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சியாக அங்கீகாரம் செய்வதற்கு மட்டுமே 10% உறுப்பினர்கள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.