News October 26, 2024

₹199, ₹299-க்கு தீபாவளி ஸ்பெஷல் தொகுப்பு: அரசு

image

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகளில் வரும் 28ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு மளிகைப்பொருள் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் கிடைப்பதை விட, மிக குறைந்த விலையில் பிரீமியம் ₹199 மற்றும் எலைட் ₹299 என இரண்டு வகையாக விற்கப்படும். இந்த மளிகை தொகுப்புகள், ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News January 19, 2026

மதுரை: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

image

செக்கானூரணியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் கவியரசன்(16), நேற்று முன்தினம் அவர்களது தோட்டத்து வீட்டில் உள்ள ஃபேனை போட முயன்றுள்ளார். ஃபேன் வயர் அறுந்து கிடக்க அதை சரி செய்ய முயன்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு அளிக்கப்பட்டு, உசிலம்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு அவர் பலியானார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 19, 2026

குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவிப்பு

image

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, வேட்டி, சேலை, முழுக் கரும்பு ஆகிய தொகுப்பு வழங்கப்படவுள்ளன. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

News January 19, 2026

21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

image

வாழைப்பழங்களிலேயே செவ்வாழையில் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.

error: Content is protected !!