News October 26, 2024
இந்திய அணி மோசமான தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்துள்ளது. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஷ்வால் 77, ஜடேஜா 42 என ஓரளவு சிறப்பான ரன்களை எடுத்தனர். நியூசி., இரு இன்னிங்ஸ்களில் முறையே 259 & 255 ரன்களும், இந்தியா 156 & 245 ரன்களும் எடுத்தன.
Similar News
News January 29, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 29, தை 15 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 12:45 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: ஏகாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 29, 2026
ராகுல் – கனிமொழி சந்திப்புக்கு காரணம் இவரா?

சமீபத்தில், திமுக இதுவரை தங்களுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவே இல்லை என TN காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது அடாவடி அணுகுமுறை காரணமாகவே யாரும் பேச வேண்டாம் என ஸ்டாலின் கட்சிக்குள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், இனி தொகுதி பங்கீடு குறித்து நேரில் பேசிவிடலாம் என்ற முடிவின்படியே, ராகுல் – கனிமொழி பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.
News January 29, 2026
சென்சார் விதிகளை பின்பற்ற வேண்டும்: சவுந்தர்யா ரஜினி

தணிக்கை வாரியம் இன்றோ, நேற்றோ புதிதாக உதயமான அமைப்பல்ல. அது மதிக்கப்பட வேண்டும் என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும்,ரசிகர்களுக்கு எந்த மாதிரியான படங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அந்த தணிக்கை வாரியமே முடிவு செய்கிறது என்றும், இந்தியாவில் சினிமா படங்கள் சென்சார் வாரியத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது நீண்டகாலமாக தொடர்ந்து வரும் வழக்கம் எனவும் பேசியுள்ளார்.


