News October 26, 2024

உங்கள் தகவல்கள் திருடப்படலாம் எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட போலீசார் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தியுள்ளனர். இணைய தளத்தை பயன்படுத்தும் போது வரும் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்கள் தகவல் திருடப்படலாம். இது தொடர்பான புகார்களுக்கு
சைபர் கிரைம் ஹெல்ப் லைன்: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in புகார் தெரிவிக்கலாம்

Similar News

News August 14, 2025

திண்டுக்கல்: உங்கள் ஊராட்சி வரவு செலவு கணக்கை பாருங்க!

image

திண்டுக்கல் மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து உங்கள் ஊராட்சியின் நிர்வாக வெளிப்படை தன்மையை காணலாம்! அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 14, 2025

திண்டுக்கல் : ஆதிதிராவிட இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் (Forklift Operator) பயிற்சி வழங்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார். இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) விண்ணப்பிக்கலாம்.

News August 14, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல்: நாக்பூர் தீக்ஷா பூமியில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவிற்கு செல்லவுள்ள 150 தமிழ்நாட்டு பௌத்தர்களுக்கு தலா ரூ.5000 மானியம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், www.bcmbcmw.tn.gov.in இணையதளத்திலும் கிடைக்கும். விண்ணப்பங்களை ஆவணங்களுடன் நவ.30க்குள் சென்னை சேப்பாக்கம் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!