News October 26, 2024
குமரி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 1586 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 1624 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 261 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 310 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 426 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 685 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Similar News
News August 9, 2025
ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் புதிய கருவி

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தப் பிரிவிற்கு ரத்தம் பிரித்தெடுக்கும் புதிய கருவி ரூ.75 லட்சம் செலவில் வந்துள்ளது. இந்த கருவினை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பார்வையிட்டு அதனை இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மருத்துவக் கல்லூரி முதல்வர் லியோ டேவிட் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
News August 9, 2025
குமரி: காவல் அதிகாரிகள் பதவி உயர்வு

குமரி மாவட்டத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்று இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதில் எஸ்.பி.சி.ஐ.டி பரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் பதவி உயர்வு பெற்று தென் மண்டலத்திற்கு விரைவில் பணி மாற்றம் செய்யப்படுகிறார். இதேபோல குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஜாண் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் மேற்கு மண்டலத்திற்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
News August 9, 2025
குமரி: எல்லாம் நிறைவேறும் தாணுமாலய சுவாமி கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உள்ளது. இங்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே அருள்பாலிப்பதால் இங்கு எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி இங்கு நிறைய பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். இது தேவேந்திரன் சாபம் நீங்கிய தலம் என்றும் நம்பப்படுகிறது.