News October 26, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டர் சட்டத்தில் கைது

image

திண்டிவனம் அடுத்த சிங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (33). இவர்,  கடந்த மே மாதம் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில், நேற்று எஸ்.பி. தீபக் சிவாஜி பரிந்துரை பேரில், மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவின்படி, ராஜசேகரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 18, 2026

விழுப்புரம் மக்களே பண மோசடியா? click!

image

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, விழுப்புரம் EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

விழுப்புரத்தில் 250 கோழிகள் இலவசம்!

image

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

விழுப்புரம்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு விரைவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற படைக்கலன்கள் (துப்பாக்கிகள்) வைத்திருப்பவர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு இன்று (பிப்.18) காலை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!