News October 26, 2024
நெல்லை கலெக்டருக்கு குவியும் பாராட்டு

நெல்லையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்கள் இருக்கும் நிலையில், சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் விதமாக அலையாத்தி காடுகளை அமைக்கும் முயற்சியில் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆக்சிஜனை வழங்கும் மாங்குரோவ் கன்றுகளை நட்டு காலநிலை மாற்றத்தை சமநிலைப்படுத்தும் நெல்லை கலெக்டரின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Similar News
News February 19, 2026
JUST IN திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (பிப் 21) நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT
News February 19, 2026
நெல்லை: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 19, 2026
நெல்லை – ஹைதராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

நெல்லை வழியாக கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் வரை வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மார்ச்.6 முதல் மார்ச்.27 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் (எண் 07230) மார்ச்.4 முதல் மார்ச்.25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.


