News October 26, 2024
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் தீ காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு வார்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 20 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
திருவையாறில் லாரி மோதி வாலிபர் பலி

திருவையாறு பங்களா தெருவை சேர்ந்தவர் குணசீலன்(30). இவர் விளாங்குடி மெயின் ரோட்டில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி குணசீலன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குணசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்போ ஓடிய நிலையில், இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.
News August 13, 2025
குண்டர் சட்டத்தில் அடைக்க தஞ்சை ஆட்சியர் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குப்பாட்ட பகுதியை சேர்ந்த தனது மாமனாரை தெலுங்கானா மாநிலத்திற்கு கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளியான தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந் ராவ் (வயது-42), இவரை மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
News August 13, 2025
தஞ்சை: மத்திய அரசு வேலை! தேர்வு கிடையாது..

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <