News March 18, 2024
தனித்து விடப்பட்டதா அதிமுக?

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி ஏற்கெனவே தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. ஆனால், அதிமுக நிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகின்றனர். புதிய தமிழகம் போன்ற சிறு கட்சிகள் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில், தேமுதிக இணையுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இதனால், இந்த தேர்தலில் அதிமுக தனித்து விடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Similar News
News August 19, 2025
தங்கம் விலை ₹1,680 வரை குறைந்தது

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10-ம் தேதி சவரனுக்கு ₹75,560-க்கு விற்பனையான தங்கம் விலை, சுமார் ₹1,680 வரை குறைந்து இன்று ₹73,880க்கு விற்பனையாகிறது. 10 நாள்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த வெள்ளி விலையும் இன்று ₹1000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் சூழல் இருப்பதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News August 19, 2025
5 ரூபாய் டாக்டர் காலமானார்

சென்னையில் ₹5-க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் வேணி (71) மாரடைப்பால் காலமானார். 1 லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களை பார்த்துள்ள இவர், கணவர் இறந்த பின்பு, அவரது ₹5 சேவையை தொடர்ந்து வந்தார். அவருடைய இழப்பை கேட்டு சென்னை மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். முன்னதாக, இவரது கணவர் டாக்டர் ஜெயச்சந்திரன் 48 ஆண்டுகளாக ₹5-க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில், கடந்த 2018-ல் காலமானார்.
News August 19, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
2. இந்தியாவின் முதல் ரயில் பாதை எங்கு அமைக்கப்பட்டது?
3. ஆபரேஷன் Blue Star எந்த ஆண்டு நடந்தது?
4. இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றவர் யார்?
5. திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை?
பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.