News October 26, 2024

55,706 மரக்கன்றுகள் நடப்பட்டன: சென்னை மாநகராட்சி

image

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், 9ஆவது மண்டலம் 104ஆவது பிரிவு பகுதியில், மாநகராட்சி முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுமார் 55,706 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், இந்த வாரம் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து 7,404 மரக்கன்றுகள் நடப்பட்டன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் அனைவரும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News November 20, 2024

மாஞ்சா நூல் சோதனையில் காவல்துறையினர்

image

சென்னையில் குழந்தை உட்பட 2 பேரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாஞ்சா நூல் விற்பனை குறித்து புதிய தகவல்களும் வெளியாகி வருகின்றன. அண்மை காலங்களில் குறைந்து இருந்த மாஞ்சா பட்டம் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 17ஆம் தேதி மாஞ்சா பட்டத்தின் நூல் அறுத்ததில் இரண்டரை வயது குழந்தை உட்பட இருவரின் கழுத்து அறுப்பட்டனர்.

News November 20, 2024

FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு அனுமதி இலவசம்

image

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை, பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என்று இந்திய கூடைப்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

News November 20, 2024

BMW கார் மோதி ரேபிடோ ஊழியர் பலி

image

சென்னையில் BMW சொகுசு கார் மோதிய விபத்தில் ரேபிடோ ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் – தாம்பரம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார், டூவீலர் மீது பலமாக மோதியது. இதில், பாண்டி பஜாரைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ரேபிடோ ஊழியர் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். 1 மணி நேர தேடுதலுக்கு பின், புதரில் இருந்து அவரது உடலை போலீசார் மீட்டனர்.