News March 18, 2024
பாஜகவுக்கு என்ன லாபம்?

நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி சேர்வதாக பாமக அறிவித்துள்ளது. இதனால், பாஜகவுக்கு அதிகப்படியான பலன்கள் இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவுடனான கூட்டணியை முறித்திருப்பதால், தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது பாஜக. பாமகவின் வாக்கு சதவீதம் இணையும் போது பாஜகவுக்கு அது மிக சாதகமான முடிவுகளை கொடுக்கும்.
Similar News
News November 8, 2025
பெரம்பலுர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..
News November 8, 2025
X-Ray பிறந்த நாள் இன்று!

உடலை அறுக்காமலேயே, உள்ளே உள்ள பிரச்னைகளை எளிதாக கண்டறிய அதிகம் பயன்படுத்தும் ஒன்று X-Ray. நவ.8, 1895-ல், ஜெர்மானிய விஞ்ஞானி Wilhelm Conrad Rontgen இந்த கதிர்களை கண்டுபிடித்தார். கேத்தோடு கதிர்களை பரிசோதனை செய்தபோது, ஒரு கதிர் மட்டும் அட்டை வழியாக பாய்வதை கண்டார். தன் மனைவியின் கை எலும்புகளையே அவர் முதல் X-Ray படமாக பதிவு செய்தார். இதற்காக 1901-ல் அவர் இயற்பியலில் முதல் நோபல் பரிசை பெற்றார்.
News November 8, 2025
தாத்தாவானார் அன்புமணி

அரசியலில் இளைஞர் போல் ஆக்டிவ்வாக இருக்கும் பாமக தலைவர் அன்புமணி தாத்தாவும், செளமியா பாட்டியாகவும் அந்தஸ்து பெற்றுள்ளனர். ஆம்! அன்புமணியின் 2-வது மகள் சங்கமித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சினிமா தயாரிப்பாளரான சங்கமித்ரா, கடந்த 2024 தேர்தலின்போது, செளமியாவுக்கு ஆதரவாக வீடுவீடாக பரப்புரை செய்து கவனத்தை ஈர்த்தவர். பாமகவின் அடுத்த அரசியல் வாரிசு இவர்தான் என பேச்சு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.


