News March 18, 2024
பழைய ரிஷப் பண்ட்-ஐ பார்ப்பது கடினம்

ரிஷப் பண்ட் பழைய மாதிரி அதிரடியாக விளையாடுவது கொஞ்சம் கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ரிஷப் பண்ட் முட்டிப் பகுதி இன்னும் பலம் பெற்று இருக்காது. விக்கெட் கீப்பராக பணியாற்றுவது சிரமமாக இருக்கும். எனவே ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் நாம் உண்மையான ரிஷப் பண்டை பார்க்க முடியாது. அதற்காக சில ஆட்டங்கள் நாம் காத்திருக்க வேண்டிய தேவை நிச்சயம் இருக்கும்” என்றார்.
Similar News
News October 21, 2025
WORLD ROUNDUP: மெக்சிகோ வெள்ளத்தில் 76 பேர் பலி

*பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற பதிவான லேசான நில அதிர்வு
*ஏமன் கடற்கரையில் எல்பிஜி டேங்கர் வெடித்த நிலையில் 23 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
*ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்வரை போர் ஓயாது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
*மெக்சிகோவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 76-ஆக உயர்வு
*டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் போராட்டம்
News October 21, 2025
டிரம்பின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த ஈரான்

ஈரான் – அமெரிக்கா இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை 5 சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப் மீண்டும் ஈரானை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை ஈரானின் தலைவர் காமேனி நிராகரித்துள்ளார்.
News October 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 495
▶குறள்:
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
▶பொருள்:தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.