News October 26, 2024
அரிசியின் தரம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியாய விலை கடையில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து உள்ளது. ரத்த சோகையை தடுப்பதாகவும், இதனால் பொது விநியோகத்திட்ட அரிசியினை வாங்கி பயன்படுத்தலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
கள்ளக்குறிச்சி: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News February 5, 2026
ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் “என் ஊர், என் கனவு” மாவட்ட தொலைநோக்குத் திட்டம் தயாரிப்பது குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (05.02.26) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் புதிதாக அறிவித்துள்ள இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
News February 5, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (05.02.2026) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


