News October 26, 2024
‘லப்பர் பந்து’ படக்குழுவை வாழ்த்திய சிம்பு

நடிகர் சிம்பு ‘லப்பர் பந்து’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. இந்நிலையில், இப்படத்தை பார்த்த சிம்பு படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News February 8, 2026
கடலூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

கடலூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!
News February 8, 2026
லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம்..

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்யும் அனைவருக்கும் என் வாழ்க்கை ஒரு பாடம். நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் – இவை 2 மகள்களுடன் தற்கொலை செய்த பெண்ணின் கடைசி வரிகள். பல்லாயிரம் கனவுகளுடன் காதல் திருமணம் செய்த பத்மாவை, கணவரின் வேலையில்லா திண்டாட்டமும், கடன் தொல்லையும் இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. ஆந்திராவின் புத்தூர் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
News February 8, 2026
பாகிஸ்தானுக்கு பலத்த அடி கொடுத்த அமெரிக்கா

அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாக்., PM ஷெபாஸ் ஷெரீப் & ராணுவ தளபதி அசிம் முனீர் வாஷிங்டனுக்கு பலமுறை சென்று, அமெரிக்காவின் ஆதரவை பெற தீவிரமாக முயற்சி செய்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது, பாகிஸ்தானுக்கு பலத்த ராஜதந்திர அடியாக கருதப்படுகிறது.


