News October 26, 2024
இந்த எண்களில் இருந்து CALL வருகிறதா? இதை செய்யுங்க

மொபைல் அழைப்பு மூலம் மோசடி நடைபெறுவதை தடுக்க டிராய் அவ்வப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், +697 மற்றும் +698 எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்கும்படியும், உடனே அந்த எண்களை பிளாக் செய்துவிடும்படியும் வலியுறுத்தியுள்ளது. அப்படி செய்யவில்லையெனில் மோசடி, மிரட்டலுக்கு ஆளாக நேரிடலாம் எனவும் டிராய் எச்சரித்துள்ளது. SHARE IT.
Similar News
News September 10, 2025
இதனால்தான் பிரேக்கப் செய்தேன்: தீபிகா படுகோன்

நடிகை தீபிகா படுகோன் தனது முன்னாள் காதலன் சித்தார்த் மல்லையாவை பிரேக்கப் செய்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். கடைசியாக இருவரும் டின்னருக்கு சென்றதாகவும், அப்போது சாப்பிட்டதற்கு சித்தார்த் தன்னை பணம் கட்ட சொன்னது, தன்னை மிகுந்த சங்கடத்திற்கு ஆளாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சித்தார்த்தின் நடத்தை அருவருப்பாக இருந்ததால் பிரேக்கப் செய்ததாகவும் நினைவு கூர்ந்துள்ளார்.
News September 10, 2025
எப்புட்றா.. வாழைப்பழம் வாங்க ₹35 லட்சம் செலவு..!

உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடுகள் நடப்பதாக அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக, வீரர்களுக்கு வாழைப்பழம் வாங்கியதில் ₹35 லட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், BCCI மற்றும் உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கம் முறைகேடு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
News September 10, 2025
புல்லட் பைக்குகளின் விலையை குறைத்த RE!

GST 2.0 எதிரொலியாக பல கார் நிறுவனங்கள் விலையை குறைத்தன. அந்த வகையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் தங்களது 350CC பைக் மாடல்களின் விலையை ₹22,000 வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 22-ம் தேதி அமலுக்கு வரும். எந்தெந்த மாடல்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை, மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.