News March 18, 2024
சிவகங்கை ஆட்சித்தலைவர் ஆலோசனை

சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அச்சகங்களின் உரிமையாளர்கள், நகை அடகு கடை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டபங்களில் உரிமையாளர்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் ஆகியோர்கள் அனைவரும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு வியாபாரம், தொழில் போன்றவற்றை முறையாக செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
Similar News
News October 24, 2025
சிவகங்கை நுங்கு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை காமராஜா் நகரை சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் இடையில் கடந்த 27.4.2018 அன்று நுங்கு வியாபாரம் செய்ததில் பிரச்சனை ஏற்பட்டு மறுநாள் சிவகங்கை வாரச்சந்தை முன் முத்துப்பாண்டியை பூமிநாதன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அறிவொளி, பூமிநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
News October 24, 2025
சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் அக்.27 மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் அக்.30 தேவர் குருபூஜை விழாவை ஒட்டி சிவகங்கை, காளையார் கோயில், திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு இந்த இரண்டு நாட்களும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக மற்றொரு நாள், வேலை நாளாக அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.
News October 24, 2025
மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

அக்25) சனிக்கிழமை அன்று காலை 10 முதல் மாலை 3 மணி வரை டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளாம். அனுமதி இவவசம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளில் தங்களின் விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். https://forms.gel/8AKg3uhmWued2mQX6.


