News October 26, 2024
இரவில் அறைக்கு அழைத்தனர்… பிரபல நடிகை பகீர்

இரவில் தங்களது அறைக்கு வருமாறு ஹீரோக்கள் அழைத்ததாக ஹிந்தி நடிகை மல்லிகா செராவத் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மர்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், அண்மையில் படப்பிடிப்புக்காக துபாய் சென்றபோது, அந்தப்பட ஹீரோ தனது அறை கதவை தட்டியதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது, ஹிந்தி ஹீரோக்கள் சிலர் இரவில் அவர்களின் அறைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
டி20 WC-ல் அதிகபட்ச ஸ்கோர் அடித்த டாப் 5 வீரர்கள் யார்?

பொதுவாக டி20 WC தொடர் தொடங்கிய பின்பு தான் பரபரப்பு ஏற்படும். ஆனால் வங்கதேச விலகல் காரணமாக தொடருக்கு முன்னதாக பரபர விவாதம் எழுந்துள்ளது. வரும் பிப்.7 முதல் 10-வது ICC டி20 WC தொடங்குகிறது. இந்நிலையில் இதுவரை நடந்த 9 டி20 WC-ல் அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்பதை தெரிந்துகொள்ள வலது பக்கம் Swipe செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.
News January 27, 2026
ஜனவரி 27: வரலாற்றில் இன்று

*1785 – அமெரிக்காவின் முதலாவது பொதுப் பல்கலைக்கழகம் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. *1858 – இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி நிதிக்காக இலங்கையில் £2,771 நிதி திரட்டப்பட்டது. *1984 – கல்பாக்கத்தில் முதல் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது. *1945 – பிரபல தமிழக பேச்சாளர் நெல்லைக் கண்ணன் பிறந்த தினம். *2009 – இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமன் நினைவு தினம்.
News January 27, 2026
ரயில் தாமதத்தால் மாணவிக்கு ₹9 லட்சம் இழப்பீடு!

ரயில் தாமதத்தால் மாணவிக்கு ₹9.10 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. UP-ன் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்தவர் சம்ரிதி. கடந்த 2018-ம் ஆண்டு இவர் புக் செய்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்ததால் லக்னோவில் நடந்த BSc நுழைவுத் தேர்வை எழுத முடியவில்லை. இதற்காக அவர் நுகர்வோர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தான், அடுத்த 45 நாட்களுக்குள் இழப்பீடு செலுத்தக்கோரி 7 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது.


