News March 18, 2024

கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

image

தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் பெரும் வகையில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேர்தல் தொடர்பாக பதிவான புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Similar News

News October 24, 2025

ராணிப்பேட்டை: 12 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர்!

image

ராணிப்பேட்டை: வாலாஜாரோடு ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, நடந்த தீவிர சோதனையில் நதீம்(31) என்பவர் வைத்திருந்த பெட்டியில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

News October 24, 2025

அரக்கோணத்தில் அதீத கனமழை!

image

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் பதிவின் படி, அதிகபட்சமாக அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதையடுத்து, தருமபுரி ஹரூரில் 11 செ.மீ, மோகனூர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ என மழை பதிவாகியுள்ளது. உங்கள் பகுதியிலும் தொடர் மழை, பாதிப்புகள் இருந்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க!

News October 24, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினசரி இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாகன ரோந்து, கால்நடை ரோந்து என இருவிதமாகவும் பணி செய்து வருகின்றனர்.

error: Content is protected !!