News October 26, 2024

தென்காசியில் இன்று இளைஞர் திறன் திருவிழா!

image

ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் தென்காசி மாவட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் இளைஞர் திறன் விழா இன்று(அக்.,26) கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இதில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கமல் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News July 11, 2025

ஆலங்குளத்தில் தேர்வு தோல்வியால் இளைஞர் தற்கொலை

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அருண் பாரத் (32). இவர் ஸ்வீட் கடை வைத்திருந்தார். இவர் சமீபத்தில் குரூப் 1 தேர்வு எழுதி இருந்தார். இதில், அவர் தேர்ச்சி பெறாததால், மனம் உடைந்து காணப்பட்ட அவர், நேற்று (ஜுலை 10) தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 11, 2025

தென்காசி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

image

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையானது, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வருடத்திற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில் முறையே ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இப்பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்.

News July 11, 2025

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 18 அன்று காலை 10 – 2 மணி வரை நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாமில் 8ம் வகுப்பு முதல் ITI, டிப்ளமோ, டிகிரி வரை கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633-213179 இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம். SHARE பண்ணுங்க..

error: Content is protected !!