News March 18, 2024
கடைசி வரை தனிமையாக வாழப் போகிறேன்

திருமணம் செய்து கொள்கிற எண்ணத்தை தான் கைவிட்டுவிட்டதாக நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த அவர், “25 வயதில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது அமையவில்லை. இப்போது எனக்கு 40 வயதாகிறது. இதன் பிறகு திருமணம் செய்யும் எண்ணமில்லை. கடைசி வரை தனிமையான வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ளப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 5, 2025
இவைதான் இந்தியாவின் விலை உயர்ந்த விஷயங்கள்!

பொதுவாக உலகளவில் பிராண்டட் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அவை சற்று மாறுபடுகின்றன. இங்கு கழுதைப்பாலில் தொடங்கி தேயிலை வரை, அதன் சிறப்புத் தன்மை காரணமாக அதிக விலைக்கு விற்பனையாகின்றன. அந்தவகையில், இந்தியாவில் அதிகவிலை கொண்ட பொருள்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இதில் உங்களை ஆச்சரியப்படுத்தியதை கமெண்ட் பண்ணுங்க.
News November 5, 2025
காங். தோல்வியை மறைக்க ராகுல் முயற்சி: கிரண் ரிஜிஜூ

<<18205262>>ஹரியானா வாக்கு திருட்டு<<>> குறித்து ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார். ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்களே வாக்காளர் பட்டியல் தொடர்பாக எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும், காங்கிரஸின் தோல்விகளை மறைக்க ராகுல் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ஜென் Z வாக்காளர்களை ராகுல் தூண்டிவிடுவதாகவும் சாடியுள்ளார்.
News November 5, 2025
ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும், அதே சமயத்தில் அறிவியல் உண்மையாக இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.


