News October 26, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News February 7, 2026

நடிகர் பொன்னம்பலத்திற்கு விஷம்.. பரிதாப நிலை

image

உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம், தனது நிலைக்கு கூட பிறந்த அண்ணனே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். குடும்ப பிரச்னையால் தன்னுடைய உதவியாளரை வைத்து ரசத்தில் குதிரை பொடியை கலந்து கொடுத்துவிட்டதாகவும், இதனால் 3 வருஷமாக பேதி ஏற்பட்டு உடம்பே வீணாகிவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் பீரில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

News February 7, 2026

தவெகவில் செங்கோட்டையன் புறக்கணிப்பா? அருண்ராஜ்

image

தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அருண்ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். தேர்தல் அறிக்கை குழுவில் KAS இல்லை என்பதால் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அர்த்தம் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார். தேர்தல் பிரச்சார குழுவில் KAS முக்கிய உறுப்பினராக உள்ளதாகவும், எல்லோருக்கும் தனித்தனி பொறுப்புகளை விஜய் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News February 7, 2026

FLASH: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

image

இந்த வார வர்த்தக முடிவில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹3,840 குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. கடந்த வாரம் (ஜன.31) 22 கேரட் தங்கம் சவரன் ₹1,19,200-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹1,15,360 ஆக சரிந்துள்ளது. இதேபோல், வெள்ளியும் கிலோவுக்கு ₹35,000 சரிந்துள்ளது. 1 கிராம் ₹285-க்கும் 1 கிலோ ₹2.85 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!