News March 18, 2024

ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்குவதா?

image

மத்திய அரசின் ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவை நாதக தலைவர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “PM SHRI பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்த ஒத்துக்கொண்ட திமுக அரசு தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டில் பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி, மாநிலக் கல்வியைக் காவி மயமாக்குவதுதான் திராவிட மாடலா” என்றார்.

Similar News

News August 13, 2025

சின்னசாமி மைதானத்துக்கு தொடரும் சோதனைகள்

image

செப்.30-ம் தேதி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் துவங்குகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இத்தொடரின் போட்டிகளை திருவனந்தபுரத்திற்கு மாற்ற BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறை அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கம் தவறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News August 13, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 13 – ஆடி 28 ▶ கிழமை: புதன் ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News August 13, 2025

மனச்சோர்வை போக்க… டிப்ஸ்

image

மனச்சோர்வை உடனே போக்க முடியாது. ஆனால், பின்வரும் செயல்பாடுகள் மூலம் மகிழ்ச்சியை மீட்கலாம்: *மன அழுத்தத்தை குறையுங்கள் *போதுமான அளவு தூங்கவும் *சத்தான, ஆற்றல்தரும் உணவுகளை சாப்பிடுங்கள் *எதிர்மறை எண்ணங்களை தவிருங்கள் *எதையும் தள்ளிப்போடுவதை தவிருங்கள் *அன்றாட வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தவும் *உங்கள் உணர்வுகளை புரிந்து ஆதரவு காட்டுபவர்களுடன் தொடர்பில் இருங்கள் *மனநல கவுன்சலரிடம் ஆலோசனை பெறலாம்.

error: Content is protected !!