News October 25, 2024
Way2 செய்தி எதிரொலியால் ஊராட்சி நடவடிக்கை

சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கவிதா நகர் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டன. இதுகுறித்து Way2 வில் செய்தியாக வெளியிடப்பட்டது. செய்தியின் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றியதுடன் அங்கு குப்பைகள் கொட்டுபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News August 26, 2025
புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்து அமைச்சர்கள்

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், இன்று (ஆக.26) அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
News August 26, 2025
விருதுநகரில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

விருதுநகர் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 26, 2025
சிவகாசியில் இந்தாண்டு 30% விலை உயரும்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் மொத்த வியாபாரிகள் பட்டாசு வாங்க குவிந்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி முன்கூட்டியே வரும் நிலையில் அதிக அளவிலான வெடி விபத்து விபத்தின் காரணமாக நடைபெற்ற ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பட்டாசு 30% வரை விலை உயர வாய்ப்புள்ளது.