News October 25, 2024
Apply Now: NLC நிறுவனத்தில் 1,013 பணியிடங்கள்

NLC நிறுவனத்தில் காலியாகவுள்ள 1,013 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Trade Apprentice, Technician Apprentice, Degree Apprentice உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ITI, Diploma, D.Pharm & Any UG Degree. வயது வரம்பு: 18-27. உதவித்தொகை: ₹8,766 – ₹12,524. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.6. கூடுதல் விவரங்களுக்கு <
Similar News
News January 15, 2026
கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பில் டாப் 3-ல் இந்தியா!

கொழுப்பு கல்லீரல் நோய் (FATTY LIVER) பாதிப்பில் உலகளவில் இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுப்பழக்கத்தை தாண்டி இப்போது உடல் பருமனும், நீரழிவும் இந்நோய்க்கு முக்கிய காரணம் என்றும், நாட்டின் கல்லீரல் கேன்சர் பாதிப்பில் 40% வரை இந்நோயுடன் தொடர்பு உள்ளது என்றும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனை தடுக்க வாரத்திற்கு 150 Mins உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் அவசியம்.
News January 15, 2026
தமிழ் காமெடி நடிகர் மரணம்.. மகள் உருக்கம்

மறைந்த காமெடி நடிகர் ரோபோ சங்கரின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகள் SM-ல் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். முதல் முறையாக உங்க பிறந்தநாளுக்கு நீங்க இல்லாம இருக்கோம் அப்பா; எல்லாரும் வெயிட் பண்றோம் என அவர் வருந்தியுள்ளார். உன் சிரிப்பில்லாத வீடு வெறுமையாகவும், உன் குரல் இல்லாத நாள்கள் எல்லாமே கனமாவும் இருக்கிறது அப்பா என பதிவிட்டு தனது ஏக்கத்தை இந்திரஜா சங்கர் வெளிப்படுத்தியுள்ளார்.
News January 15, 2026
சர்ச்சையில் சிக்கிய அஜித்

நடிகரும், கார்பந்தய வீரருமான அஜித், ரிலையன்ஸின் CAMPA எனர்ஜி டிரிங்க் விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் SM-ல் தற்போது சர்ச்சையாகி உள்ளன. ரொனோல்டோ போன்ற உலக கால்பந்து ஜாம்பவானே இதுபோன்ற விளம்பரங்களை தவிர்க்கும் நிலையில், அஜித் நடிப்பது ஏன் எனவும், தனது பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கூட வராத அஜித், இதற்கு மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


