News October 25, 2024

விஜய் மாநாட்டில் அஞ்சலை அம்மாள் “கட் அவுட்”

image

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் ஞாயிறு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டு திடலில் மொழிப் போர்த்தியாகி அஞ்சலை அம்மாள் “கட் அவுட்” இடம் பெற்றிருப்பது கவனத்தை பெற்றுள்ளது. அஞ்சலை அம்மாள் கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தென்னிந்திய ஜான்சி ராணி என காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர். SHARE IT.

Similar News

News January 24, 2026

கடலூர்: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

image

கடலூர் மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in என்ற<<>> இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

கடலூர்: தீக்குளித்து முதாட்டி பலி

image

அண்ணாகிராமம் அடுத்த பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராசாத்தி (68). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சேலையில் தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 24, 2026

கடலூர் ஆட்சியrரின் முக்கிய அறிவிப்பு

image

குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வரும் ஜன.26-ம் தேதி அன்று காலை 11 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. அதனால் இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சிப் பொதுமக்களுக்கு தனி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!