News October 25, 2024
புதுவைக்கு உலக அளவில் 2ஆம் இடம்

சுற்றுலா செல்லலாம் என்று முடிவு செய்வோர் பலர் புதுச்சேரியை தேர்வு செய்வர். இந்நிலையில், லோன்லி பிளானட் ( Lonley Planet) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டு சுற்றுலா செல்ல சிறந்த இடங்களுக்கான பட்டியலில், உலக அளவில் 2வது இடத்தை புதுச்சேரி பிடித்துள்ளது. மேலும், முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டின் Toulouse என்ற நகரம் உள்ளது. உங்கள் கருத்துக்களை COMMENT மற்றும் SHARE செய்யவும்.
Similar News
News September 14, 2025
புதுச்சேரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 86 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் <
News September 14, 2025
புதுவை: கடுமையான வயிற்று வலியால் தற்கொலை

புதுவை, கூடப்பாக்கம்பேட் கோபால் (65) இவருக்கு 3 வாரமாக கடுமையான வயிற்று வலி இருந்தது அவர் மகன் கோவிந்தன் அவரை சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று கோவிந்தன் வேலைக்கு சென்ற நேரத்தில் வயிற்று வலியால் விரக்தியடைந்த கோபால் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த கோவிந்தன் அளித்த புகாரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 13, 2025
காரைக்காலில் ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை, கலைஞர் கருணாநிதி புறவழிச்சாலை இணைப்பு சாலைக்கான முதற்கட்ட கல ஆய்வு பணிகளை ஆட்சியர் மேற்கொண்டார். இணைப்பு சாலைகளுக்கு தேவையான முன் கள ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தினார்.