News March 18, 2024
கொலை வழக்கில் நான்கு பேர் கைது

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் நேற்று முன்தினம் (மார்.16) மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் ஜமுனா, அவரது கணவா் சுரேஷ், அப்பா முருகன், அம்மா முருகேஸ்வரி ஆகியோா் இணைந்து கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் நேற்று (மார்.17) கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 21, 2025
தேனி: உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் போது நேர்ந்த விபரீதம்

கண்டமனுார் அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார் (32). இவர் நேற்று (அக்.20) வடபுதுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். தேனி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ராம்குமார் என்பவர் ஒட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் விஷ்ணுகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
News October 21, 2025
தேனி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

தேனி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 21, 2025
தேனி: உயிரை எடுத்த கடன்… வாலிபரின் விபரீத முடிவு

கேரளாவை சேர்ந்தவர் கிஷோர் குமார் (43). இவர் கூடலூர் பகுதியில் தனியாக தங்கி டிரைவர் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு கடன் தொல்லை அதிகரித்ததன் காரணமாக சில தினங்களாக மனவேதனையில் இருந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று (அக்.20) அவர் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.