News March 18, 2024
அஞ்சலி செலுத்திய மோடி

கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 1998 பிப்.14ஆம் தேதி கோவையில் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 11 இடங்களில் 12 கி.மீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன. அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.
Similar News
News October 22, 2025
நெல் கொள்முதல்: EPSக்கு அமைச்சர் பதிலடி

EPS ஆட்சியில் தினசரி 700 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 1,000 மூட்டைகளாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, நெல் மணிகள் நாற்று நடும் அளவிற்கு வளர்ந்த சம்பவங்கள் உண்டு என்றும் <<18072011>>EPS<<>>-க்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, நெல் கொள்முதலை அரசு தாமதிப்பதாக EPS விமர்சித்திருந்தார்.
News October 22, 2025
சற்றுமுன்: ஒரேநாளில் ₹7,000 விலை குறைந்தது

<<18073330>>தங்கம்<<>> விலையைபோல் வெள்ளி விலையும் இன்று மளமளவென சரிவை சந்தித்துள்ளது. 1 கிலோ வெள்ளி விலை காலையில் ₹2,000, மாலையில் ₹5,000 குறைந்துள்ளது. தற்போது, சென்னையில் வெள்ளி 1 கிராம் 175-க்கும், கிலோ ₹1.75 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹32,000 குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது. SHARE IT.
News October 22, 2025
தீபாவளியில் ஒரு லட்சம் கோடி UPI பரிவர்த்தனை!

நடப்பு மாதத்தில் UPI பரிவர்த்தனை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பரை காட்டிலும், நடப்பு மாதத்தில் நாளொன்றின் சராசரி பரிவர்த்தனை 13% அதிகரித்து ₹94,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும், தீபாவளிக்கு முதல் நாளில் மட்டும் உச்சபட்சமாக 74 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதன்மூலம் தினசரி பரிவர்த்தனை ஒரு லட்சம் கோடியை தாண்டியது. GST 2.0, பண்டிகை காலம் ஆகிய காரணங்களால் உச்சம் தொட்டுள்ளது.