News October 25, 2024

எறும்புத் திண்ணி விற்பனை: 4 பேர் கைது

image

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே எறும்புத் திண்ணியை விற்பனை செய்ததாக ஏற்காட்டைச் சேர்ந்த குழந்தை, பழனி, சத்தியராஜ், மூர்த்தி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எறும்புத் திண்ணி விலங்கை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதனை வனப்பகுதிக்குள் விட்டனர்.

Similar News

News January 28, 2026

சேலம்: ஒரே நாளில் 20 கோயில்களில் கும்பாபிஷேகம்!

image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று சேலம் சரகத்திற்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சேலம் இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயில், பனமரத்துப்பட்டி மகா கணபதி கோயில் மற்றும் நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கோயில்களில் புனித நீராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News January 28, 2026

சேலம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

FLASH: வாழப்பாடியில் தட்டிதுக்கிய விஜய்!

image

வாழப்பாடி முன்னாள் தேமுதிக ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில், சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபனுடன் சென்று அவர் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் தேமுதிகவில் 14 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!