News October 25, 2024
அப்பாவுக்கு எதிரான வழக்கு ரத்து

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. ஜெ., மறைவுக்கு பின் 40 அதிமுக MLAக்கள் திமுகவில் சேர விரும்பியதாக அப்பாவு கூறியதற்கு எதிராக அதிமுகவின் பாபு முருகவேல் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, தனிப்பட்ட முறையில் புகார்தாரர் வழக்கை தாக்கல் செய்துள்ளார். கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் தரவில்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்தார்.
Similar News
News February 7, 2026
BREAKING: சிக்கன் விலை மளமளவென குறைந்தது

சனிக்கிழமை வந்தாச்சு, சிக்கன் எடுக்க நினைப்பவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ் தான் இது. நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை இன்று ₹5 குறைந்து ₹115-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டை கோழி விலையும் ₹2 குறைந்து ₹70-க்கு விற்பனையாகிறது. மேலும், முட்டை கொள்முதல் விலை ₹5.25 ஆகவே நீடிக்கிறது. இதனால் சிக்கன் கடைகளில் கிலோ ₹20 – ₹30 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊரில் எவ்வளவு?
News February 7, 2026
வெளிச்சத்திற்கு வந்த பாக்., வெடிகுண்டு விவகாரம்!

இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று நடந்த மனித <<19067497>>வெடிகுண்டு தாக்குதலில்<<>> 31 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். 196 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். இந்த தாக்குதலை இந்தியாதான் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியிருந்தது. அதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் மூலம் பாக்., அரசின் குற்றச்சாட்டு பொய்யாகியுள்ளது.
News February 7, 2026
இந்தியா – USA டீலிங்… சீக்ரெட்டாக பயனடையும் சீனா

இந்தியா – USA இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தால் சீனா மறைமுகமாக பயனடைகிறது என நிபுணர்கள் சொல்கின்றனர். அதாவது USA-ஆல் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது. இதனால், தனது பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க, சீனாவுக்கு ஒரு பீப்பாய்க்கு 12 டாலர் வரை ரஷ்யா தள்ளுபடி வழங்கியுள்ளது. இதனால், ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் 47% அளவுக்கு வாங்கிவரும் சீனா, மேலும் கூடுதலாக வாங்கும் என கூறப்படுகிறது.


