News October 25, 2024
பேச்சிப்பாறை அணையிலிருந்து இன்று மாலை உபரிநீர் திறப்பு

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று 42.60 அடியாக உள்ளது.தொடர்ந்து, இன்று மாலைக்குள் 43 அடியாகிவிடும் நிலையில், அணையில் இருந்து உபரி நீர் மாலை முதல் திறந்து விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 3, 2026
குமரி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News February 3, 2026
குமரியில் நாளை இங்கெல்லாம் மின் தடை..!

குமரி (ம) கேப் இன்டோர் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், மருங்கூர், புதுகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9மணி முதல் மதியம் 3மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
News February 3, 2026
குமரி: தேசிய அளவில் சாதனை புரிந்த காவலர்கள்

குமரி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கீதா மற்றும் தலைமை காவலர் டேவிட் ஜான் ஆகியோர், 28.01.2026 முதல் 01.02.2026 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 46 வது தேசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக் பெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். சிறப்பாக செயல்பட்டு போட்டிகளின் வெற்றி பெற்றவர்களை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (பிப். 2) பாராட்டினார்.


