News October 25, 2024
Dilli will return soon… லோகேஷ் கனகராஜ் பதிவு

டில்லி விரைவில் திரும்பி வருவார் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ‘கைதி’ திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்துள்ள அவர், படப்பிடிப்பு தொடங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்து, நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். விஜய்யின் ’பிகில்’ படத்துடன் மோதிய இப்படம், அடுத்தடுத்த நாள்களில் வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தின் 2ஆம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது.
Similar News
News November 6, 2025
30 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த அக்டோபர் 9-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 30 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 30 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அபராத தொகையாக தலா ₹2.50 லட்சம் செலுத்தினால் உடனடியாக விடுதலை ஆகலாம் என்றும், இல்லையென்றால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.
News November 6, 2025
பிரபல நடிகர் காலமானார்… குவியும் இரங்கல்

புற்றுநோய் பாதிப்பால் காலமான பிரபல கன்னட நடிகர் ஹரிஷ் ராய்(55) மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். KGF படத்தில் காசிம் சாச்சா பாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஹரிஷின் மறைவு பெரும் சோகம் என்றும், அவரது இழப்பு கன்னட திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாதது எனவும் கர்நாடக DCM சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். RIP
News November 6, 2025
வெள்ளை முடியை பிடுங்கினால் உண்மையில் என்ன ஆகும்?

வெள்ளை முடியை பிடுங்கினால் நிறைய வெள்ளை முடிகள் வரும் என்பார்கள். அது உண்மை இல்லை. ஆனாலும், வெள்ளை முடிகளை பிடுங்கக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். ஏனென்றால், வெள்ளை முடியை பிடுங்கினாலும் அந்த வேர்க்காலில் இருந்து மீண்டும் வெள்ளை முடிதான் முளைக்குமாம். அத்துடன், தொடர்ந்து முடியை பிடுங்கி வந்தால் அந்த இடத்தில் முடியே வளராமல் போகலாம் என எச்சரிக்கின்றனர். SHARE.


